தினகரன் 31.05.2010
தமிழில் பெயர் பலகை ஒரு வாரம் அவகாசம்
திருச்சி, மே 31: வணிக நிறுவனங்கள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளின் கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் சவுண்டையா தலைமையில் நடைபெற்றது. வகித்தார். தொழிலாளர் துணை ஆணையர் சோம்புராஜன், தொழிலாளர் ஆய்வாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடந்த 1947ம் ஆண்டு, கடைகள் மற்றும் நிறுவன சட்ட விதிகளின் படியும், 1958ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதிகளின் படியும், மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், கடைகள், வணிக நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள், நிறுவனங்கள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும்.
பிறமொழி எழுத்துக்கள் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவற்றுக்கு பெரிய அளவில் தமிழ் மொழி எழுத்துக்கள் இருப்பது மிகவும் அவசியம். மேலும் பிற மொழி எழுத்துக்களுக்கு முன் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படவேண்டும். இந்த நடைமுறைகள் ஒருவார காலத்திற்குள் பின்பற்றப்பட வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கலெக்டர் தெரிவித்துள் ளார். தவறினால் அரசு நடவடிக்கை