தினமலர் 15.05.2010
தமிழில் பெயர் பலகை மேயர் வேண்டுகோள்
கோவை : ‘தமிழில் பெயர் பலகைகளை எழுதி ஒத்துழைக்க வேண்டும்‘ என, மேயர் வெங்கடாசலம், வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேயர் வெங்கடாசலம் அறிக்கை:கோவையில் அடுத்த மாதம் செம்மொழி மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டையொட்டி கோவையிலுள்ள அனைத்து வணிகநிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களின் பெயர் பலகைகள் அனைத்திலும் முதலில் தமிழ் மொழியில் பெரிய எழுத்துக்களாலும், தேவைப்பட்டால் மறு வரிசையில் ஆங்கிலத்தில் பெயர்களை எழுத வேண்டும். இந்த நடவடிக்கையை மே 31 ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.