திட்டப் பணிகள் புறக்கணிப்பு: நல்லூர் பேரூராட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
நல்லூர் பேருராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப் பேருராட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.
நல்லூர் பேருராட்சி உறுப்பினர்கள் ஜினி, ஜெய்கர், கஸ்தூரிபாய், கிறிஸ்டோபர், சதீஷ்குமார், ரகு, மணிகண்டன் மற்றும் நீலா ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனு:
நல்லூர் பேருராட்சிக்கு உள்பட்ட நந்தன்காடு,சாத்தினாங்குழி, குமிட்டிவிளை, மங்காட்டான்விளை, காரவிளை, பல்லன்விளை, மதிலகம், கசவன்விளை உள்ளிட்ட வார்டுகளில் திட்டப் பணிகள் புறக்கணிக்கப் பட்டு வருகின்றன. மேலும் சுகாதாரக் கேடுகளால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை கழிவுகள் கழிவுநீர் ஓடையில் விடப்படுவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது குடிநீர், உப்புநீராக மாறி வருகிறது என தெரிவித்துள்ளனர்.