தினமலர் 26.04.2010
திண்டுக்கல்லில் புதிய காய்கறி மார்க்கெட் துவக்கம் : நீண்ட கால பிரச்னைக்கு விரைவில் தீர்வு
திண்டுக்கல் : திண்டுக்கல்லின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டை மாற்றும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக நகராட்சி தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் காந்தி மார்க்கெட் முன்பு விளையாட்டு மைதானமாக இருந்தது.வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வாங்க ஏராளமானோர் இங்கு வருவதால் நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் காய்கறிகளின் இலை தழைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதால் கழிவுகளால், துர்நாற்றமும் வீசுகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் பழநி ரோட்டில் உள்ள லாரி செட் டை, குப்பை கிடங்கிற்கு மாற்றி விட்டு, லாரி செட் இருந்த இடத்தில் காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு திண்டுக்கல் நகராட்சிக்கு புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
நகராட்சி தலைவர் நடராஜன் கூறியதாவது: திண்டுக்கல்–பழநி ரோட்டிலுள்ள லாரி செட் இடம் நகராட்சிக்கு சொந் தமானது. இது 4 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த இடத்தில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட அரசு 4 கோடியே 50 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தில் விரைவில் கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நகராட்சி கூட்டத்தில் வைத்து முறைப்படி பணி துவக்கப்படும்.மேலும் நகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் புதிய ரோடுகளும் அமைக்கப்படும் என்றார்.