தினத்தந்தி 23.10.2013
திருச்சி, ‘டெங்கு’ காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் தீவிரதடுப்பு
எடுக்க வேண்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவு
தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு
மேயர் ஜெயா உத்தரவிட்டார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பொதுமக்களின் குறை தீர்க்கும் நாள்
கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெயா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 68 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பார்வையிட்ட மேயர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க
மாநகராட்சி அதிகாரிடம் உத்தரவிட்டார்.
டெங்கு காய்ச்சல் அறிகுறி
திருச்சி மாநகராட்சி முழுவதும் டெங்கு
விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. டெங்கு
அறிகுறிகள் தெரிய வந்தால் அப்பகுதியில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு நோய்
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் சாதாரண
காய்ச்சலாக இருந்தாலும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள
அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து
வைக்கக்கூடாது.
தடுப்பு நடவடிக்கைகள்
மாநகரின் எந்த பகுதியிலும் தொடர்
காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் என கூறினார். மேலும் மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும்
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை அந்தந்த கோட்ட உதவி ஆணையர்கள் மற்றும் உதவி
செயற்பொறியாளர்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி,
துணை மேயர் மரியம் ஆசிக், நகர் நல அலுவலர் அல்லி, செயற்பொறியாளர்கள்
அருணாச்சலம், நாகேஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.