திருச்செந்தூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் ஏலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தகவல்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பிடித்து ஏலம் விடப்படும் என்று பேரூராட்சி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் பாதுகாப்பின்றி சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சுகாதாரகேடா கவும் உள்ளது. பாதுகாப்பின்றி சுற்றித்திரியும் மாடு களை, வரும் 22ம் தேதி பிடிக்கப்பட்டு அன்று மாலை பஸ் நிலைய மாட்டுத்தாவணியில் வைத்து பகிரங்கமாக பொது ஏலத்தில் விடப்படும். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் மாடு ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி ஏலம் கேட் கலாம். கூடுதல் ஏலத்தொகை முழுவதும் செலுத்திய பின் மாடுகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.