தினகரன் 30.07.2010
திருச்செந்தூரில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம்
திருச்செந்தூர், ஜூலை 30: திருச்செந்தூரில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாமை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
திருச்செந்தூர் பேரூ ராட்சி அலுவலக வளாகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் நடந்தது. செயல்அலுவலர் வீரப்பன் தலைமை வகித்தார். தாசில்தார் இளங்கோ முன்னிலை வகித் தார். முகாமை துவக்கி வைத்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசுகையில்,
இப்பகுதியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற காலதாமதம் ஏற்படுவததாக கூறப்பட்டது. இதையடுத்து சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு வாரம் நடைபெறும் இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சுகாதார ஆய் வாளர் ராஜமுத்து, கவுன்சிலர்கள் செந்தில்ஆறுமுகம், இசக்கிமுத்து, ஜெரால்டு சங்கர், அரிகரசுப்பிரமணி யன், நகர திமுக செய லா ளர் கோபால், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்முருகேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப் பாளர் சுரேஷ், வேல்ராம கிருஷ்ணன், சாத்தான்குளம் காசியானந்தன் உட் பட பலர் கலந்து கொண் டனர்.