தினமணி 29.07.2010
திருச்செந்தூரில் பிறப்பு–இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம்
திருச்செந்தூர், ஜூலை 28: திருச்செந்தூர் பேரூராட்சியில் பிறப்பு–இறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கிய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா
ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போக்குவதற்காக இச் சிறப்பு முகாம் புதன்கிழமை முதல் ஒரு வார காலம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள பொதுமக்கள் இச் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
திருச்செந்தூர் வட்டாட்சியர் இரா.இளங்கோ தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மெ.வீரப்பன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் தி. செந்தில்குமார், ச. இசக்கிமுத்து, ஜெரால்டு, சங்கர், ஏ.கே.அரிகரசுப்பிரமணியன், திருச்செந்தூர் நகர திமுக செயலர் ஆ.கோபால் பங்கேற்றனர்.
ஒன்றிய இளைஞரணி செயலர் மா.சுரேஷ், கொம்மடிக்கோட்டை காசியானந்தன், வேல்ராமகிருஷ்ணன், இளங்கோ, சந்தையடியூர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.