தினமணி 01.03.2013
திருச்செந்தூர் பேரூராட்சிக் கூட்டம்
திருச்செந்தூர் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சித் துணைத் தலைவர் தொ.ராஜநளா, உறுப்பினர்கள் ப.தா.கோட்டை மணிகண்டன், க.சுதா, மு.வடிவேல், அ.சண்முகசுந்தரம், ம.அரசு மீனா, செ.இசக்கியம்மாள், மு.காளிதாஸ், செ.சாந்தி, மு.சுப்புலட்சுமி, க.மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.