திருப்பத்தூர் பேரூராட்சி கடைகளில் உணவுப் பொருள்கள் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் கடைகளில் உணவுப் பொருள் பாதுகாப்பு கருதி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களால் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தூர் பேரூராட்சிகுள்பட்ட கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலைய வணிக வளாகங்களிலும் உணவுப் பாதுகாப்பு சட்டப்படி காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் பற்றிய ஆய்வினை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மரு. அருள்நம்பி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ம. சுரேஷ், ஆர்.ஜெய்சங்கர் ஆகியோர் மேற்கொண்டனர். இவ்ஆய்வின் போது கடைகளில் போலியாகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள், உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி, முதலியன குறிப்பிடப்பட்டுள்ளனவா என்று சரிபார்த்தனர். அவ்வாறு இல்லாத உணவுப் பொருள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.5 ஆயிரம் மதிப்பிலான உணவு பண்டங்கள், பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ஆய்வின் போது பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் பணியினை மேற்கொண்டனர். மேலும் அனைத்துக் கடைகளுக்கும் உணவுப் பொருள்களின் தரமும் மற்றும் சுகாதார முறையில் விற்பனை மேற்கொள்ளுதல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது.