தினமணி 27.07.2013
திருப்புவனத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல
மாதங்களாகத் திறக்கப்படாமல் இருந்த பேரூராட்சி அலுவலக புதியக் கட்டடத்தை
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை திறந்து
வைத்தார்.
இவ்விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் தலைமை வகித்தார்.
மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ எம். குணசேகரன், பேரூராட்சித் தலைவர்
வசந்தி சேங்கைமாறன், பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்குழு தலைவர்
செந்தில்நாதன், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் தெய்வநாயகம், பேரூராட்சி
நிர்வாக அதிகாரி அமானுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.