தினமலர் 14.09.2010
திருப்பூருடன் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இணையுமா? எல்லையை விரிவுபடுத்த திட்டம்
திருப்பூர் : வரும் 2011ல் திருப்பூர் மாநகராட்சியுடன் அருகில் உள்ள நல்லூர், 15 வேலம் பாளையம் நகராட்சிகள், எட்டு ஊராட்சிகள் இணைய உள்ளன. விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சி பகுதி யுடன், திருமுருகன்பூண்டி பேரூராட்சியையும் இணைக்க அரசாணை வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியுடன் 15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சி, செட்டிபாளையம், மண்ணரை, தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், நெருப் பெரிச்சல், முத்தணம்பாளையம் ஊராட்சிகளை இணைக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதி களின் பதவிக்காலம் 2011ல் நிறைவடைந்த பின், விரிவுபடுத் தப்பட்ட மாநகராட்சியை அமைக் கலாம் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், “மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதற் காக, அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்க்க வேண்டியிருந்தால், அதற்கான கருத்துருக்களை அனுப்பலாம்‘ என, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.உடனே, திருமுருகன்பூண்டி பேரூராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கலாம் என அப்பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி யின் தற்போதைய பரப்பளவு 14.76 சதுர கி.மீ.,; 2001ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 18 ஆயிரத்து 557 மக்கள் வசிக்கின்றனர். இடைக் கால மக்கள் தொகை 22 ஆயிரத்து 292 பேர். 2009-10ம் ஆண்டு வருவாய் 2.11 கோடி ரூபாய்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி இணைக்கப்பட்டால், விரிவு படுத்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி யின் பரப்பளவு 174.11 ச.கி.மீ., ஆக இருக்கும். எதிர்பார்க்கப்படும் ஆண்டு வருவாய் 80.24 கோடி ரூபாயாக உயரும்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, திருப்பூர்–அவிநாசி பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாலும், இணைக்கப்பட உள்ள வேலம்பாளையம் நகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள தாலும்; வேகமாக நகர்மயமாகும் பேரூராட்சியாக இருப்பதாலும்; தொழில் நிறுவனங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதாலும்; மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ள வேண்டியுள்ளது.
மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டால், தேவையான உள் கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். எனவே, இணைக்கப்பட உள்ள 10 உள்ளாட்சி அமைப்புகளுடன் திரு முருகன்பூண்டி பேரூராட்சியை யும் இணைத்து, மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு மாநகராட்சி பரிந்துரைக்க உள்ளது. இதுதொடர்பாக இன்று நடக்கும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட உள்ளது. அத் தீர்மானம் அரசின் உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.