திருவண்ணாமலையில் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு
திருவண்ணாமலையில் கோடைகாலத்தை முன் னிட்டு குடிநீர் வழங் கும் பணியை நகராட்சி தலைவர் என்.பாலச் சந்தர் ஆய்வு செய்தார்.
நீரேற்று நிலையம்
திருவண்ணாமலை நக ராட்சி பகுதிகளுக்கு சமுத்தி ரம் ஏரியில் இருந்தும் குடிநீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் விநியோக பணிகளை நேற்று நகராட்சி தலைவர் என்.பாலச்சந்தர், நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சமுத்திரம் ஏரியில் நகராட் சிக்கு குடிநீர் வழங்கும் ஆழ் துளை கிணறு மற்றும் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தலைவர் ஆய்வு
இந்த நீரேற்றும் நிலையம் மற்றும் ஆழ்துளை கிணற்றை தலைவர் என்.பாலச்சந்தர் பார்வையிட்டு அங்கிருந்து கூடுதலாக குடிநீர் வினியோ கம் செய்வது குறித்து ஆணை யாளருடன் ஆய்வு செய் தார்.
பஸ்நிலையம்
பின்னர் திருவண் ணாமலை பஸ் நிலையத்திற்கு சென்று பாவை யிட்டு ஆய்வு செய் தனர். அங்கு கடை கள் நகராட்சி விதி களின¢ படி வைக்கப் பட் டுள்ளதா என் பதை பார்வை யிட் டனர். அப் போது கடைக்கு வெளியே நடை பாதையில் வைக் கப்பட்டிருந்த கடைகளை உள்ளே வைக்குமாறு கூறி னர்.மேலும் அங் குள்ள கழிவுநீர் கால்வாய் களையும் பார்வையிட்ட னர்.
நகராட்சி என்ஜி னீயர் பாஸ்கரன், கவுன்சிலர்கள் ஜே.எஸ்.செல்வம், எம்.ஏ.பாலன், பற்குணகுமார், அ.தி.மு.க. பாசறை நகர செயலாளர் நரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.