தினமணி 06.08.2013
தினமணி 06.08.2013
திருவலத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி
திருவலம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி சனிக்கிழமை
நடைபெற்றது.
இப்பணியை பேரூராட்சி மன்றத் தலைவர் டி.செல்வி சரவணன் தொடங்கிவைத்தார்.
பேரூராட்சியின் செயல் அலுவலர் ச.கோமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்
பாலசுப்பிரமணியம், வட்டார மருத்துவ அலுவலர் எம்.ரெபேக்கா தேன்மொழி, வட்டார
சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர்கள்
எ.ராஜ்குமார், ஜெ.பூபதி, நீதிபதிராஜன், கே.எஸ்.இளங்கோவன், எம்.ராகவன்,
கே.ரவி, எஸ்.ரமேஷ்பாபு ஆகியோர் மேற்பார்வையில் மகளிர் சுய உதவிக்குழுவினர்
15 வார்டுகளிலும் துப்புரவுப் பணியை மேற்கொண்டனர். கொசு மருந்தும்
தெளிக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும்
விநியோகிக்கப்பட்டன.