தினமணி 26.06.2013
தினமணி 26.06.2013
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவச யோகா பயிற்சி
ஈரோடு மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
ஈஷா யோகா மையத்தின் உதவியுடன் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு
மேயர் ப.மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர்
மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
ஈஷா யோகா மையத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி பிரபோதா
பயிற்சி அளித்தார். இதில் 600 துப்புரவுத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இப்பயிற்சி தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில்
மாநகராட்சி மண்டலக்குழுத்தலைவர் கேசவமூர்த்தி, ஈஷா யோகா மைய
ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர். ஈஷா
யோகா மையம் சார்பில் கோவை மாநகராட்சியில் உள்ள 3,000 துப்புரவுத்
தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.