தினமலர் 17.04.2010
தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் விநியோகம் : வல்லநாட்டில் சுவீடன் நாட்டு குழு இன்று பார்வை
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி தலைமை நீரேற்றும் நிலையத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை சுவீடன் நாட்டு குழுவினர் இன்று பார்வையிடுகின்றனர்.
சுவீடன் நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு என்று ‘கம்யூனல்‘ என்ற தொழிற்சங்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சங்கம் துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.இதனை கொண்டாடும் வகையில் உலகில் உள்ள பிற நாடுகளுக்கு சென்று அங்குள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.உலகத்தின் பல நாடுகளுக்கு செல்லும் இந்த குழுவினர் இந்தியாவில் தமிழகம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களை தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சுவீடன் குழு தேர்வு செய்துள்ளது. நேற்று நெல்லையில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.இன்று தூத்துக்குடிக்கு சுவீடன் நாட்டு குழுவினர் வருகின்றனர். கிறிஸ்தியானா தலைமையில் எமில், நிக்கல்சன், மேலின், ஜென்னிநிர்சன், பிரடிரிக் ஆர்திக், இமில், பெர்ணாட்ஸ் ஆகியோர் வருகின்றனர்.தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி அனைத்து பணியாளர் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் நெல்லை சீதாராமன் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு அவர்களை மாநகராட்சியில் உள்ள இடங்களுக்கு அழைத்து செல்கிறார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யும் வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்தை குழுவினர் ஆய்வு செய்கின்றனர