தினமலர் 31.03.2010
தென்காசியில் இன்றுநகராட்சி கூட்டம்
தென்காசி:தென்காசி நகராட்சி கூட்டம் இன்று (31ம் தேதி) நடக்கிறது.தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் இன்று (31ம் தேதி) காலை 11 மணிக்கு நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் இப்ராகிம், கமிஷனர் அப்துல் லத்தீப் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் 50 மன்ற பொருட்கள் மீது விவாதம் நடக்கிறது. அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி நகராட்சி தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.