தினமலர் 22.04.2010
தேக்கடியில் நீர் எடுத்து குமுளிக்கு சப்ளை செய்ய புதிய திட்டம்
கூடலூர் : தேக்கடி ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து குமுளிக்கு சப்ளை செய்ய புதிய குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.கேரள மாநிலம், குமுளிக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தேக்கடி ஏரியில் குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. குமுளி, தேக்கடி சுற்றுலாத்தலம் ஆக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டினரின் வருகையும் அதிகரித்துள்ளது. ‘
இது மட்டுமின்றி குடியிருப்புகளும் அதிகமாகியுள்ளன. ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டத்தில் எடுக் கப்படும் நீர், பற்றாக்குறையானதை தொடர்ந்து மேலும் ஒரு குடிநீர் திட் டம் வேண்டும் என குமுளி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி தேக்கடி ஏரியில் தண்ணீர் எடுத்து குடிநீர் சப்ளை செய்யும் வகையில் ஒரு புதிய குடிநீர் திட்டத்தை கேரள அரசு அண்மையில் அறிவித்தது. இந்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ராட்சத பைப்புகள் குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் ரோட்டில் இறக்கி வைத்துள்ளனர்.
இந்த ரோடு வனப்பகுதியாக இருப்பதால் பைப் லைன் பதிக்க வனத்துறையின் அனுமதியை கோரியுள்ளனர். இதுவரை அனுமதி கிடைக்காததால் குடிநீர் பைப்புகள் பல நாட் களாக தேக்கடி ரோட்டில் அப்படியே கிடக்கின்றன. இன்னும் சில தினங்களில் வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் குடிநீர் பைப் பதிக்கும் பணி துவங்கும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.