தினமலர் 05.05.2010
தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடிநீர் வரி வசூலில் நிலுவை
தேனி : சொத்துவரி, தொழில் வரி, காலிமனையிட வரி ஆகியவற்றை 100 சதவீதம் வசூலித்தநிலையில் குடிநீர் கட்டணம் 61 சதவீதம் மட்டுமே வசூலாகியுள் ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 25 ஆயிரம் வீடுகளுக்கு வரிவிதிப்பு செய்யப்படுகிறது. பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றில் சொத்து வரி, தொழில் வரி, காலி மனையிட வரி வசூல் ஆகியவை 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான கடைகளை குத்தகை விட் டதில் 99 சதவீதம் குத்தகை வசூலாகி உள்ளது.அதே நேரம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் காட்டி வரும் அலட்சியத்தை போலவே குடிநீர் கட்டணம் வசூலிப்பதிலும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். மார்ச் 31 ல் முடிவடைந்த 2009-2010 நிதியாண்டில் 61 சதவீதம் குடிநீர் கட்டணம் மட்டுமே வசூல் ஆகி உள்ளது. குடிநீர் சப்ளையில் குளறுபடியால் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதில் மக்களும் மெத்தனமாகவே உள்ளனர்.