தினமணி 09.11.2010
தேனியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிக்கு பூமி பூஜை
தேனி
, நவ. 8: தேனி அல்லிநகரம் நகராட்சியில் ரூ. 38.66 கோடி மதிப்பீட்டிலான பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பூ. முத்துவீரன் தலைமையில் திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.தேனியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக
2007-ம் ஆண்டு ரூ. 35.27 கோடியில் திட்டம் மதிப்பீடு செய்து, அரசிடம் அனுமதி பெற்றப்பட்டது. பாதாளச் சாக்கடை திட்டத்துக்கான கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால், இந்த ஆண்டு திட்டம் மறு மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ. 38.66 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள அரசிடம் அனுமதி பெறப்பட்டது.தேனி நகராட்சிக்கு உள்பட்ட
33 வார்டுகளும் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 56.70 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 2,332 கழிவு நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக கே.ஆர்.ஆர். நகர், கருவேல்நாயக்கன்ப்பட்டி ஆகிய இடங்களில் கழிவு நீரேற்றும் நிலையங்களும், பங்களாமேடு– கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளன.கே
.ஆர்.ஆர். நகரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கான பூமி பூஜைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து, பணிகளைத் துவக்கி வைத்தார்.குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரத்தினவேல்
, நகர்மன்றத் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் இலங்கேஸ்வரன், ஆணையர் மோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.