தொட்டியத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலை சீரமைப்பு பணி
தொட்டியம்: மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தொட்டியம் பேரூராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் அதன் தலைவர் தமிழ்ச்செல்வி திருஞானம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சித்ரா,துணைத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வறட்சி நிதியாக தொட்டியம் பேரூராட்சிக்கு 10 ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, தொட்டியம் மதுரைகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தேர் செல்லும் பாதையில் சாலைகளை செப்பனிடும் பொருட்டும் மண் கொட்டி சீர்செய்யவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலர் சம்பத் நன்றி கூறினார்.