தினமணி 16.09.2014
தொழில் உரிமம் பெற மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னையில் தொழில் புரிவோர் தொழில் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919-ன்படி,
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொழில் நடத்த தொழில் உரிமம் பெறவேண்டும். மேலும் இந்த உரிமத்தை ஒவ்வொரு நிதியாண்டிலும் புதுப்பிக்க வேண்டும். எனவே சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொழில்புரியும் வணிகர்கள் உடனடியாக தொழில் உரிமத்துக்கான விண்ணப்பத்தை மண்டல அலுவலகங்களில் அளித்து உரிமம் பெற வேண்டும். தொழில் உரிமம் பெறாமல் தொழில்புரிவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களை 1913 என்ற இலவச எண்ணிலோ மாநகராட்சியின் இணையதளத்திலோ அறிந்துகொள்ளலாம்.