தினமணி 03.05.2010
நகரங்களுக்கு இணையாக கிராமங்கள் வளர்ச்சி
கோவை, மே 2: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் பெருமிதத்துடன் கூறினார்.
÷கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரப்பட்டியில் மே தினத்தை ஒட்டி சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அவர் பேசியதாவது (படம்):
÷அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தால் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
÷2010}11ம் ஆண்டில் வாரப்பட்டி கிராமத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுடைய குடிசைகள் கண்டறியப்பட்டுள்ளன.
÷இந்தக் குடிசைகளுக்கு பதிலாக நிரந்தரமாக கான்கிரீட் வீடுகள் விரைவில் கட்டித் தரப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்தில் அடிப்படை கட்டடமைப்பு வசதிகள் வாரப்பட்டியில் மேற்கொள்ளப்பட உள்ளன.
÷புளியமரத்துப்பாளையத்தில் ரூ. 4.98 லட்சம் மதிப்பில் குளம் அமைக்கும் பணி, குளத்துப்பாளையத்தில் நூலகம் அமைக்கும் பணி, சிமென்ட் சாலை வசதியுடன் மயானம் அமைக்கும் பணி, சுல்தான்பேட்டை மேனிலைப் பள்ளியில் ரூ. 1.50 லட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, பூச்சிபாளையத்தில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி மற்றும் பிற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன, என்றார்.
÷ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சிவகுமார், உதவித் திட்ட அலுவலர் அப்பாவு, வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.தேவகி உள்பட பலர் பங்கேற்றனர்.