தினமலர் 18.03.2010
நகராட்சி கடைகளுக்கு ‘சீல்‘ வைப்பால் பரபரப்பு
நாமக்கல்: நகராட்சிக்கு சொந்தமான கடைகள் விற்பனை செய்வதாக வெளியான தகவலையடுத்து, அந்தக் கடைகளை நகராட்சி கமிஷனர் தலைமையிலான அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில் சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள கடைகள் சிலவற்றை, அதை ஏலம் எடுத்தவர்கள் விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தனர். இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. கமிஷனர் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று இரவு 8 மணியளவில், விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்ட நான்கு கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.