தினமலர் 26.07.2010
நகராட்சி பகுதிகளிலும் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்
: கலெக்டர்கம்பம் : நகராட்சி பகுதிகளிலும் விரைவில் “மக்களை தேடி மாவட்ட நிர்வாகம்‘ என்ற குறை தீர் கூட்டங்கள் நடத்தப்படும் என கலெக்டர் முத்துவீரன் தெரிவித்தார்.
கம்பத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு ராமகிருஷ்ணன் எம்
.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார். கலெக்டர் முத்துவீரன் பேசியதாவது: கிராம பகுதிகளில் வசிக் கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் மட்டுமல்லாது நகரப்பகுதிகளில் வசிப்பவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு திட்டங்களை செயல்பட்டு வருகிறது.திருமண உதவித் திட்டம்
, பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் என மொத்தம் ஒரு கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பிலான உதவிகள் தற்போது வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது நகராட்சி பகுதிகளிலும் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வீரராகவன்
, ஒன்றிய தலைவர்கள் சூர்யாதங்கராஜா ஜெயராஜ், நகராட்சி தலைவர்கள் அம்பிகா, தமிழ்செல்வி, தாசில்தார் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.