நகராட்சி பள்ளி ஆண்டு விழா
உடுமலை ருத்ரப்பநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் கே.முருகாத்தாள் தலைமை வகித்தார். ஆசிரியர் வி.கலைவாணி ஆண்டறிக்கை வாசித்தார். இதையொட்டி மாணவ, மாணவிகளின் அணிநடை பயிற்சி, கோலாட்டம், சிலம்பம், மனித கோபுரம், யோகா, ஜிம்னாஸ்டிக், கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், குழு நடனம், மாறுவேடம், நாடகம், பங்கரா நடனம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகள், கட்டுரை, ஒப்புவித்தல், கவிதை, பாடல், ஓவியம் ஆகிய தனித்திறன் போட்டிகளும், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், குண்டு எறிதல், கபடி உள்ளிட்ட குழு விளையாட்டுகளும் நடைபெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் டி.தண்டபாணி, கூடுதல் அலுவலர் அங்கயற்கண்ணி, கல்விக் குழுத் தலைவர் ஷோபா, பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர் சு.சிவசங்கர் உள்பட பலர் பங்கேற்றுப் பேசினர்.
பொதுமக்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.