தினமணி 19.04.2013
நகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
வந்தவாசி நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குநர் நடராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
வந்தவாசி நகராட்சியில் ரூ.11 கோடி செலவில் நடைபெற்று வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வந்தவாசி புதிய பஸ்நிலையம், 5 கண் பாலம், 24-வது வார்டு ஆகியவற்றில் அமைந்துள்ள சுடுகாடுகளை பார்வையிட்ட அவர் மின்மயானம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆடு அறுக்கும் தொட்டியையும் அவர் பார்வையிட்டார்.
வேலூர் மண்டல பொறியாளர் தீனதயாளன், வந்தவாசி நகராட்சி இளநிலை பொறியாளர் அமுதன், துப்புரவு ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.