தினமணி 02.05.2013
நகராட்சி வளாகத்தில் குடிநீர் வசதி
திண்டிவனம் நகராட்சி வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
அதற்காக ரூ.1.30 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை நகர் மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது ஆணையர் அண்ணாதுரை, பொறியாளர் வெங்கடேசன், மேலாளர் கிருஷ்ணராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன், முரளிதாஸ் உள்பட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.