தினமலர் 30.04.2010
நகராட்சியாக தரம் உயர்வு: அரசுக்கு பாராட்டு
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் சிறப்புநிலை பேரூராட்சி, இரண் டாம்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ஒட்டன்சத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.இங்கு தேவையான மக்கள் தொகை மற்றும் இதர வசதிகள் உள்ளதால் நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் இப்பகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சி இரண் டாம் நிலை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒட்டன் சத்திரம் பஸ்ஸ்டாண்ட் முன்பு தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் தலைமையில் கூடிய தொண்டர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங் கினர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண் ணன், நகர செயலாளர் கதிர்வேல், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.