தினமலர் 16.09.2010
நகராட்சியுடன் இணைப்பதற்கு விராட்டிக்குப்பம் ஊராட்சி எதிர்ப்பு
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்க விராட்டிக் குப்பம் ஊராட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த விராட் டிக்குப்பம் ஊரட்சியின் சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று முன் தினம் நடந் தது. ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சசிகலா புண் ணியகோடி, ஒன்றிய கவுன் சிலர் ரத்தினம் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத் தில் விராட்டிகுப்பம் ஊராட்சி ரயில்வே மேம் பாலத்தை தாண்டி உள்ளதால் விழுப் புரம் நகராட் சியுடன் சேர்க்க கூடாது. நகராட்சியுடன் இணைத் தால் ஊரக வளர்ச்சித் திட் டங்கள் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு ஆகிய பயன்கள் கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக் கப்படுவர். எனவே விழுப் புரம் நகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வலியுறுத்தி ஊராட்சி தலைவர் ஜெயச் சந்திரன் தலைமையில் கிராம மக்கள் நேற்று கலெக்டர் பழனிசாமி, நகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோரிடம் மனு அளித்தனர்