மாலை மலர் 04.05.2010
நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் திருச்சியை சேர்க்க வேண்டும்; டெல்லி மேல்–சபையில் பாலகங்கா எம்.பி. பேச்சு
சென்னை, மே.4-
டெல்லி மேல்–சபையில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்புத்துறையின் மீது நடந்த விவாதத்தில் அ.தி.மு.க. எம்.பி. பாலகங்கா பேசியதாவது:-
மக்கள் பெருக்கத்தின் காரண மாகவும், வேகமான தொழிற் மையம் உண்டாகுவதாலும், நகரங்கள் தோன்றுவதாலும், வீடுகளின் தேவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
மத்திய அரசு ஜவஹர்லால் நேரு தேசிய நகரபுணர மைப்பு திட்டத்தின் கீழ் பல மாநிலங்களுக்கு நன்மை புரிந்து வருவதை பாராட்டுகிறேன். மாந கரங்களில் அடிப்படி வசதி களை செய்ய வேண்டி 65 மாநகராட்சிகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அவற்றில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் அடங்கும். தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிராப்பள்ளியையும் இத்திட்டத்தில் சேர்க்குமாறு வேண்டுகிறேன்.
சென்னையில் பெருநகர வளர்ச்சி குழுமம் என்ற நிறுவனம் தமிழ்நாடு மாநில அரசின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கட்டிட வரைவுகளை ஒழுங்குபடுத்தி மேற்பார்வையிட்டு, மற்றும் ஒப்புதல் அளிக்கும் நிறுவன மாகும் இந்த நிர்வாகம் தற்போதைய விதிகளின்படி 3000-10000 ச.அ. கட்டிட நிலப்பரப்பில் கட்டுமான பணிகள் மேற்கொண்டால் 10-ல் ஒரு பங்கு இடத்தை அரசுக்கு இனாமாக கொடுக்க வேண்டும். அல்லது அப்பகுதிக்கான தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்.
அதுவே 10000 ச.அ. நிலப்பரப்பில் கட்டிட பணிகளை செய்யும் போது கண்டிப்பாக 10-ல் ஒரு பங்கு இடத்தை அரசுக்கு இனாமாக கொடுக்க வேண்டும். இப்படி ஒதுக்கப்படும் நிலத்தை ஒப்பன் ஸ்பேஸ் ரிசர்வ் என்பார்கள் இப்படி இருக்கையில் புதிதாக மாநகராட்சியின் விதிகளை திருத்தி ஏழைகளுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கவேண்டுமென கட்டுமானம் மேற் கொள்ளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வற்புறுத்தப்பட்டால் புதிய பிரச்சினைகளை அரசு எதிர்க்கொள்ள வேண்டிய வரும்.
மத்திய அரசு தன்னு டைய திட்டங்கள் மூலம் மாநில அரசுக்கு ஏராளாமான நிதியை ஒதுக்கி தருகிறது. இத்திட்டங்கள் முதல்– அமைச்சரின் தலைமையில் பார்வையிட ஒரு குழுவும் மத்திய அரசு உயர்மட்ட அதிகாரிகள் தலைமையிலும் குழுவும் இயங்கி வருகிறது. ஆனால் இக்குழுக்காளால் எந்த பயனுமில்லை. உதாரனமாக தமிழ் நாட்டில், கோயம்புத்தூரில் அம்மன் கோவில் பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் கட்டப்பட்டு இறுதிநிலையுள்ளது. இந்த பகுதிகட்டுமான பணிகளை மேற்கொள்ள தகுதியற்ற நிலமாகும். இதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டியது. வேலைகள் முடிவுறும் நிலையில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
விதிமுறைகளை மீறி திட்டங்களை நிறைவேற்றி மத்திய அரசு வழங்கும் நிதியை வீணடிக்கிறவர்களை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.