தினமலர் 25.07.2012
நகர்ப்புற வளர்ச்சி கண்காணிப்பு குழு
விருதுநகர்:””தமிழகத்தில் மாவட்ட வாரியாக நகர்ப்புற மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க , முதல்வர் ஜெ., உத்தரவிட,” மாணிக்கம் தாகூர் எம்.பி., கேட்டுக்கொண்டுள்ளார்.அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும், ஜூன் இறுதிக்குள் மாவட்ட வாரியாக ஜவகர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புணரமைப்பு திட்ட கண்காணிப்பு குழு அமைக்க, மத்திய நகர்ப்புற அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படவில்லை. இதனால், நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில அரசு பரிந்துரை செய்யும் திட்ட பணிகளுக்கு, நிதி ஒதிக்கீடு செய்ய இயலாத நிலையுள்ளது. நகர்ப்புறத்தின் வளர்ச்சி பாதிப்படையாத வகையில், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க, தமிழக முதல்வர் ஜெ., உத்தரவிட வேண்டும்,” என்றார்.