தினமலர் 16.03.2010
நடை மேம்பாலங்களில் லிப்ட், குப்பைகளை சேகரிக்க வீடுகளுக்கு சாக்கு : மாநகராட்சி புது திட்டம்
சென்னை : “”மேலும் பல இடங்களில் லிப்டுடன் நடை மேம்பாலம், அடுக்குமாடி பார்க்கிங், குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்க எல்லா வீடுகளுக்கும் சாக்குப்பை என அடுக்கடுக்கான திட்டங்கள் சென்னை மாநகராட்சி பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பட்ஜெட் குறித்து, மேயர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் சென்னை புறநகர் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் 200 படுக்கை வசதி, 10 வார்டுகள் கொண்ட புதிய தொற்று நோய் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தனியார் பரிசோதனை கூடங் களுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய சர்க்கரை நோய் பரிசோதனை மையம் தொடங்கப்படும். சென்னை நகரில் சிறுநீரகம் முழுமையாக பழுதடைந்து மாற்று சிறுநீரகம் வேண்டி காத்திருப்போர் 25 ஆயிரம் பேர் உள்ளனர். வட சென்னை, தென் சென்னை இரு இடங்களில் டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும்.
அமரர் ஊர்தி இலவச சேவை சென்னை நகர மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தனி தொலைபேசி எண் ஏற்பாடு செய்யப்படும். வரும் நிதியாண்டில் மேலும் 10 அமரர் ஊர்திகள் 20 குளிரூட்டு பெட்டிகள் வாங்கி இலவச சேவைக்கு பயன்படுத்தப்படும். பிரசவத்தின் போது மருத்துவமனையில் தங்கும் தாய்மார் களுக்கு மூன்று வேளையும் சிறப்பு உணவு இலவசமாக வழங்கப்படும். மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கதகதப்பாக வைத்திருக்க மெத்தையுடன் கூடிய பாதுகாப்பு வலை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமாக வழங்கப்படும்.
குப்பை தரம் பிரிக்க வீடு தோறும் சாக்குப் பைகள் வழங்கப் படும். அந்த சாக்குப் பைகளில் மறு சுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் சேகரித்து வைத் திருந்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஊழியர்கள் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் பெற்றுக் கொள்வார்கள்.
சைக்கிளுக்கு தனி பாதை: சைக்கிள் உபயோகிப்பவர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் வேகமாக செல்வதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு சைக்கிள் பாதை அமைக்கப்படும். தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வணிக பயன்பாட்டு பெருக்கத்தை வரைமுறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வட சென்னையில் சூரிய நாராயண செட்டி தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் உள்வட்ட சாலை அண்ணாநகர் மேற்கு வரை, காமராஜர் சாலை முதல் வில்லேஜ் சாலை வரை, அண்ணாசலை முதல் டாக்டர் முத்துலட்சுமி சாலை வரை ஆகிய நான்கு இடங்களில் தடையில்லா முன் மாதிரி நடைபாதைகள் அமைக்கப்படும். அண்ணாநகர், புரசைவாக்கம் மற்றும் அடையார் போன்ற முக்கிய வணிக பகுதிகளில் கட்டுதல், பராமரித்தல், ஒப் படைத்தல் திட்டதின் கீழ் தானியங்கி அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
ராஜாஜி சாலை, கடற்கரை ரயில்நிலையம் அருகிலும், என்.எஸ்.சி., போஸ் சாலை பாரிமுனை பேருந்து நியைம் அருகிலும் வாலாஜா சாலைகள், பெல்ஸ் சாலை சந்திப்பிலும், வாலாஜா சாலையில் காயிதே மில்லத் சாலை சந்திப்பிலும் காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகிலும், தர்கா பாய் தேஷ்முக் சாலையில் சத்ய ஸ்டூடியோ உள் ளிட்ட ஆறு இடங்களில் மின் தூக்கி வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படும்.
சிங்கப்பூரில் உள்ளது போல் மெரீனா கடற்கரையில் ஆர்க்கிட் மலர் தோட்டம் அமைக்கப்படும். மெரீனா கடற்கரையில் பயன் பாட்டு சாலையில் சிறுவர்கள் மகிழ்ந்திட வார விடுமுறை நாட்களில் சைக்கிள்கள் பயன் படுத்தும் சேவை பிரபல சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். மாநகராட்சி தினமான செப்டம்பர் 29ம் தேதி அகில இந்திய மாநகராட்சிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
உரிய காலத்திற்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு அரையாண்டு சொத்து வரியில் ஊக்கத் தொகை வழங்கிடவும், குறிப் பிட்ட காலத்திற்குள் சொத்து வரி செலுத்த தவறுவோருக்கு அரையாண்டு சொத்து வரியில் தண்டத் தொகை விதித்திடவும், சென்னை மாநகராட்சி சட்டத்தில் வழி வகை செய்யப்படும். சொத்து வரி வசூல் செய்பவர் களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.