தினத்தந்தி 02.11.2013
நல்லூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேயர் விசாலாட்சி தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லூர் 3-வது மண்டல பகுதியில்
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மண்டல
தலைவர் டெக்வெல் முத்து தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் செல்வராஜ்
வரவேற்றார். துணை மேயர் குணசேகரன், உதவி ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
விழிப்புணர்வு பேரணியை திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி
கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் திருப்பூர் முதலிபாளையம்
பெம்பள்ளி (சி.பி.எஸ்.சி) மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பின்
அவசியம் குறித்த அட்டைகள் தாங்கியபடி ஊர்வலமாக சென்றனர். நல்லூர் 3-வது
மண்டல அலுவலகத்தின் முன்பு தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று
பின்னர் மண்டல அலுவலகத்தை வந்தடைந்தது.
பேரணி முடிவில் பெம்பள்ளி முதல்வர்
கவுசல்யாராஜன் நன்றி கூறினார். இந்த பேரணியில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட
கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.