தினமலர் 31.03.2010
நவீன எரிவாயு தகன மேடை: நிர்வாக இயக்குனர் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.விழுப்புரத்தில் நகராட்சி,ரோட்டரி கிளப் பங் களிப்புடன் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை மையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து வேலூரிலிருந்து வந்த நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் சேர்மன் ஜனகராஜ், கமிஷனர் சிவக் குமார், பொறியாளர் பார்த் திபன், உதவி பொறியா ளர் லலிதா, ஓவர்சியர் ஜெயப் பிரகாஷ் நாராயணன், ரோட்டரி சங்க நிர்வாகி ராம கிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.திட்டப் பணிகள் குறித்து சேர்மன் ஜனகராஜ் கூறுகையில், நகராட்சி சார்பில் 54 லட்சம் நிதியுடனும் ரோட்டரி பங்களிப்புடன் ஒரு கோடி ரூபாய் மதிப் பில் நவீன எரிவாயு தகன மேடை திட்டம் செயல் படுத்தப்பட உள் ளது. முன் மாதிரியான இந்த தகன மையம் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனை மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார் என்றார்.