தினகரன் 22.09.2010
நாகர்கோவிலில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பவுண்டில் அடைப்பு
நாகர்கோவில், செப்.22: நாகர்கோவிலில் நகர பகுதியில் சுற்றி திரியும் ஆடு, மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்து வருகிறது. இவற்றை பிடித்து அப்புறபடுத்த வேண்டும் என்று பல்வேறு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கடந்த ஆண்டு எஸ்.பி அலுவலக சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து பவுண்டில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் படிப்படியாக மீண்டும் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் மாடுகளை பிடித்து பவுண்டில் அடைக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டன. நேற்று காலை நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவுப்படி நகர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 9 மாடுகள் மற்றும் 9 ஆடுகளை பிடித்து நகராட்சி பவுண்டில் அடைத்தனர்.
இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் ஒரு நாள் பராமரிப்பு மற்றும் பிடித்து செல்லும் வாகன கட்டணமாக மீ550ம், ஆடுகளுக்கு மீ525ம் அபராதமாக விதிக்கப்பட உள்ளது.
நாகர்கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்