தினமணி 03.02.2010
நாமக்கல் நகராட்சியில் இன்று குறைகேட்பு முகாம்
நாமக்கல், பிப். 2: நாமக்கல் நகராட்சிப் பகுதி மக்களிடம் குறைகேட்கும் முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். நகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வசதி, குப்பை அகற்றும் பணி, சுகாதாரப் பணி மற்றும் நகராட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் உள்ள குறைகளை நேரடியாகவோ, மனுக்களாகவோ தெரிவிக்கலாம்.பொதுப் பிரச்னை குறித்தும் கருத்து தெரிவிக்கலாம். இக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர், நகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.