தினமலர் 12.01.2010
நாய்களுக்கு ‘கு.க‘ செய்ய ஆபரேஷன் தியேட்டர்:மாநகராட்சி முடிவு
வேலூர்:வேலூரில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய, பாலாற்றங்கரையில் ஆபரேஷன் தியேட்டர் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.வேலூர் நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் நாய்கடியால் பாதிக்கப்படுவதாக மாநகர கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார்கள் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து கமிஷனர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாய்களை பிடித்த பிறகு அவற்றுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்யவேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் 5 நாட்கள் வரை அவற்றை பாரமரிக்க வேண்டும். இதற்காக வேலூர் கால்நடை மருத்துமனையில் போதிய வசதி இல்லை. எனவே பிடிபடும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய தனியாக இடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், வேலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பாலாற்றை ஒட்டி நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கென கு.க. ஆபரேஷன் தியேட்டர் கட்டப்பட உள் ளது. அதன் பிறகு எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை மூலம் நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை படிப்படியாக கட்டுப்படுத்தப்படும்‘ என்றார