தமிழ் முரசு 30.04.2013
நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் நவீன பெயர்ப்பலகை வைக்க முடிவு
புழல்: செங்குன்றம் அருகே நாரவாரிகுப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் விப்ர நாராயணன், செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.பள்ளி கட்டிடம், குடிநீர் தொட்டி, சுடுகாடு சுற்றுச்சுவர், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கிய மறைந்த செ.குப்புசாமி எம்பிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண் மை திட்டத்துக்கு உர கிடங்கு அமைத்தல், மண் புழு உரம் தயாரித்தல், குப்பைகளை தரம் பிரிக்க இயந்திரம் வாங்குதல், குப்பை அள்ள நவீன வசதியுடன் வாகனம் வாங்க வேண்டும். பேரூராட்சி எல்லையில் உள்ள எல்லை பெயர்ப்பலகை மாற்றிவிட்டு புதிய நவீன பலகை வைக்கவேண்டும்.