தினமலர் 06.04.2010
நூறு சதவீத வரி வசூல்
தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சியில், கடந்த நிதி ஆண்டில், ஒரு கோடி 35 லட்ச ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து ஒன்பது ஆண்டாக நூறு சதவீத வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தலைவர் வேலுச்சாமி, கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தனர்.