தினமலர் 27.01.2010
நெல்லை மாநகராட்சியில் ‘முதல்‘ குடியரசு தினவிழா:மாணவ, மாணவிகள் ‘கலக்கல்‘ கலை நிகழ்ச்சிகள்
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கல் என குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு, சுதந்திரதின விழா நாட்களில் கமிஷனர், மண்டல சேர்மன்கள், அதிகாரிகள் முன்னிலையில் மேயர் தேசியக்கொடி ஏற்றிய பின்பு பாளை. வ.உ.சி., மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் விழாவில் அனைவரும் பங்கேற்பது வழக்கம். இம்முறையை மாற்றி இந்த ஆண்டு முதல் குடியரசு தினத்தை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ஊழியர்கள், அலுவலர்களுக்கு பரிசு, அணிவகுப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல்முறையாக நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்தது. மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவர் பேசும் போது, “”நாடு விடுதலை பெற உழைத்த தலைவர்களின் தியாகத்தை நினைவில் கொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பின் மற்ற நாடுகளை போல இல்லாமல் மதச்சார்பற்ற அரசியல் சாசன சட்டம் இயற்றப்பட்டது. அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இன, மொழி, கலாச்சாரம் சார்ந்த மக்கள் வாழும் நாடாக நம் நாடு உயர்ந்து விளங்குகிறது.