தினத்தந்தி 04.09.2013
நெல்லையில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

நெல்லை மாநகராட்சி 5, 6, 7, 39 ஆகிய வார்டு பகுதிகளைச் சேர்ந்த
பொதுமக்களுக்கு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் தேவி பேலஸ் மகாலில் இன்று
அம்மா திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நெல்லை துணை மேயர் ஜெகநாதன் என்ற
கணேசன் முகாமை தொடங்கி வைத்தார். ஏராளமானவர்கள் அலுவலர்களிடம் மனு
கொடுத்தனர்.
இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்பு
திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு
சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள உள்ளிட்ட
பல்வேறு தேவைகளுக்காக மனுக்கள் அளிக்கப்பட்டன. தகுதி வாய்ந்த மனுக்களுக்கு
உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டன.
மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல தலைவர் மாதவன், கவுன்சிலர்கள் பரணி
சங்கரலிங்கம், சிதம்பர ஜோதி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், ஜாகீர் உசேன்,
செய்யது அப்துல் காதர், வருவாய் அலுவலர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.