தினமணி 08.02.2010
பட்டுக்கோட்டையில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
பட்டுக்கோட்டை, பிப். 7: பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை 6,706 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. பள்ளிகள், சத்துணவு மையங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனை என 26 இடங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கு.வெ. பாலகிருஷ்ணன் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தைப் புகட்டி, முகாமைத் தொடக்கி வைத்தார் ..
நகர்மன்ற முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ, நகராட்சி சுகாதார அலுவலர் மு.ந. பாலசுப்பிரமணியன், குளோபல் நர்சிங் கல்லூரித் தாளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மனோரா ரோட்டரி சங்க நிர்வாகிகள் எஸ்.எம். சின்னக்கண்ணு, ஏ. பூவலிங்கம், எஸ்.ஆர். ரவி, ஏ. முகமது அலி ஜின்னா, எஸ்.ஜெ. சம்பத், ஆர். அண்ணாதுரை, பி. கண்ணதாசன், ஏ.கே. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, நகராட்சி மேலாளர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் என். ரவிச்சந்திரன், வை. நடராஜன், பொ. மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். சொட்டு மருந்து புகட்டும் பணியில் பட்டுக்கோட்டை குளோபல் நர்சிங் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.