தினமணி 19.08.2010
பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி
பட்டுக்கோட்டை, ஆக. 18: பட்டுக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகளை விளக்கி, நகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
பேரணிக்கு பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் இ. பிரியா தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ, நகராட்சி ஆணையர் கு.வெ. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில், நகராட்சி உறுப்பினர்கள் எஸ். ஸ்ரீதர், ஏ.ஆர். பரமேஸ்வரன், ஆர். வீரையன், வி.கே.டி. ஜோதிமணி, எஸ்.ஏ.ஆர். ரகுராமன், சி. சகுந்தலா, கே. பானுமதி, எஸ்.ஜெ. சம்பத், டி. சாமிநாதன், வர்த்தக சங்கச் செயலர் தன்ராஜ், சேவை அமைப்புகளின் நிர்வாகிகள் சம்பத்குமார், ஜகநாதன், பத்மானந்தன், நகராட்சி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் விழியாக சென்று, மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் எம்.என். பாலசுப்பிரமணியன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் என். ரவிச்சந்திரன், வை. நடராஜன், பொ. மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.