தினமணி 05.07.2013
தினமணி 05.07.2013
பயணிகள் நிழற்குடைகள் சீரமைப்பு
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் சிதிலமடைந்திருந்த நிழற்குடைகள், நகராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டன.
திருவள்ளூரின் முக்கிய நெடுஞ்சாலையான ஜே.என்.சாலையில் ஸ்டேட் வங்கி,
தலைமை தபால் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய பஸ் நிறுத்தங்களில்
நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகள், மேற்கூரை இடிந்து
அபாய நிலையில்
இருந்தன. இதுகுறித்து சில தினங்களுக்கு முன் “தினமணி’ நாளிதழில்
படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் துரித
நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனை, தலைமை தபால் நிலையம் நிழற்குடைகளை
சீரமைத்தனர். ஸ்டேட்வங்கி, ஆயில் மில் நிழற்குடைகளை சீரமைக்கும் பணிகள்
நடைபெற்று வருகின்றன.