தினமலர் 15.10.2010
பயன்பாட்டிற்கு வந்த வால்பாறை நகராட்சி பூங்கா
வால்பாறை
: வால்பாறை நகராட்சி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.வால்பாறை நகராட்சி சார்பில் அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் “பூங்கா‘ கட்டப்பட்டது.கடந்த 7ம் தேதி இந்த பூங்காவை அமைச்சர் பழனிச்சாமி, சட்டசபை மனுக்கள் குழுத்தலைவர் கோவைதங்கம், மாவட்ட கலெக்டர் உமாநாத் ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட தூரி, சறுக்கல் போன்றவையும், கண்களுக்கு குளிச்சியூட்டும் வகையில் பூவாக விரிந்துவரும் நீர்வீழச்சியும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பூங்காவிற்குள் செல்ல எந்த வித கட்டணமும் இல்லை.இதனிடையே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்த பூங்காவை வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் முதன் முதலாக பார்வையிட்டு
, பல மணி நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.திறக்கும் நேரம் அறிவிப்பு இல்லை: வால்பாறை நகராட்சி சார்பில் இந்த பூங்கா திறக்கப்பட்டாலும், பரமரிக்க போதிய ஆள் இது வரை நியமிக்கப்படவில்லை. அதே போல் பூங்கா திறக்கும் நேரம் குறித்து, நகராட்சி நிர்வாகம் இது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பூங்காவை சுற்றிப்பார்க்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.மேலும் எந்த வித கட்டணமும் இல்லை என்பதால், பராமரிக்க ஆள் இல்லை என்பதாலும் பூங்காவின் அழகு மாசுபடும் என்பது தான் உண்மை.