தினகரன் 16.08.2010
பறவைகளை கூண்டில் அடைத்து துன்புறுத்துகிறார் மேயர் ஸ்ரத்தாவுக்கு எதிராக நடவடிக்கை வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை
மும்பை, ஆக.16: மும்பை மேயர் ஸ்ரத்தா ஜாதவ் தமது அரசு இல்லத்தில் பஞ்சவர்ண கிளிகள் உள் ளிட்ட பல வினோத மான பறவைகளை ஒரு கூண்டுக் குள் அடைத்து வைத்துள் ளார். மேயர் பங்க ளாவின் நுழைவு வாயிலில் இந்த கூண்டு இருக்கிறது.
“முந்தைய மேயர் சுபா ராவுலை போல் அல்லாமல் ஸ்ரத்தா ஜாதவ் வினோத பறவைகள் மற்றும் வன விலங்கை மிகவும் நேசிப் பவர்Ó என்று மேயர் பங்க ளாவை சேர்ந்த வட்டாரம் ஒன்று கூறியது.
ஆனால் வன விலங்கு வதை தடுப்பு சட்டத்தின்படி, ஒரு பறவை அல்லது மிருக த்தை கூண்டில் அடைத்து வைத்தால் அது அங்குமிங் கும் தாராளமாக செல்வ தற்கு போதிய இடவசதி இருக்க வேண்டும். இதை மீறினால் அதன் உரிமையா ளர் தண்டிக்கப்படுவார்.
மேயர் ஸ்ரத்தாவும் அனுமதியின்றி ஒரு சிறிய கூண்டுக்குள் பறவைகளை அடைத்து வைத்து இருப்ப தாகவும் இதனால் அவற்றின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருப் பதாகவும் வன விலங்கு உரிமைகளுக் கான ஆர்வலர்கள் குற்றம் சாட்டி யுள்ள னர். மேயருக்கு எதிராக நடவடி க்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித் துள்ளனர்.
இந்திய வன விலங்கு நல வாரிய உறுப்பினர் அனு ராதா சாவ்னி இது பற்றி கூறுகை யில், “மும்பையின் முதல் பிரஜை என்ற வகையில் மேயர் ஸ்ரத்தா மற்றவர் களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண் டும். ஆனால் மிகவும் சிறிய கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்து இருக் கிறார். அந்த பறவை களால் அங்கும் இங்கும் நகரக்கூட முடியவில்லைÓ என்றார்.
இப்பிரச்னை சம்மந்த மாக மேயருக்கு கடிதம் எழுதவி ருப்பதாகவும் அதில், பறவை களை மறு வாழ்வு மையத்தில் ஒப் படைக்கும்படி கேட்டுக் கொள்ளவிருப்ப தாகவும் சாவ்னி தெரி வித்தார்.
தானே, வன விலங்க வதை தடுப்பு சொசைட் டியை சேர்ந்த மற்றொரு பறவை ஆர்வலர் சகுந்தலா மஜும் தார் கூறுகையில், “வினோத பறவைகளை வைத்திருப்பது சட்ட விரோதமான செயல் அல்ல. ஆனால் சம்மந்தப் பட்ட நபர் உரிய ஆவணங் களை வைத்திருக்க வேண்டும். பெரிய கூண்டாக இருக்கு மாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்Ó என்றார் இப்பிரச்னை குறித்து கருத்து கூற மேயர் ஷ்ரத்தா மறுத்து விட்டார்.