தினமணி 04.11.2013
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
தினமணி 04.11.2013
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
மதுரை மாநகராட்சி முதலாவது மண்டலத்திலுள்ள
மாநகராட்சிப் பள்ளிமாணவ, மாணவியர் 498 பேருக்கு, விலையில்லா சைக்கிள்கள்
சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தத்தனேரி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மேயர்
வி.வி. ராஜன்செல்லப்பா, விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவியருக்கு வழங்கிப்
பேசுகையில், மாநகராட்சிப் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டில் ரூ. 1.58 கோடியில்
பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ரூ.1.86 கோடியில்
பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளுக்கு
துப்புரவுப் பணியாளர்கள் 100 பேரும், இரவு காவலர்கள் 65 பேரும் ஒப்பந்த
அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதில், மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், துணைமேயர் ஆர்.
கோபாலகிருஷ்ணன், கல்விக் குழுத் தலைவர் சுகந்தி, உதவி ஆணையர் ரெகோபெயாம்
மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் லந்து கொண்டனர்.