தினகரன் 29.06.2010
பள்ளிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
. அதில், “அந்தந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் விடுமுறைக்கு திருவனந்தபுரம் சென்று திரும்பி இருந்தால், அவர்கள் இருமல், சளியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படி அறிகுறிகள் இருந்தால் பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.