பழனி நகராட்சியில் பல்வேறு இனங்கள் ஏலம்
பழனி நகராட்சியில் திங்கள்கிழமை பல்வேறு இனங்கள் ஏலம் விடப்பட்டது.
பழனி நகராட்சியில் பேருந்து நிலையத்தில் உள்ள பல்வேறு இனங்களுக்கு புதிய மற்றும் மறு ஏலம் திங்கள்கிழமை விடப்பட்டது. நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன் ஏலத்துக்கு தலைமை வகித்தார். இதில் நகராட்சி பேருந்து நிலையத்தில் டிவி பெட்டிகள் வைத்து விளம்பரம் செய்யும் உரிமையை இந்துமதி என்பவர் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும், சாமான்கள் பாதுகாக்கும் அறையை ஜோதி என்பவர் ஒரு லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும், எடை மிஷின் வைத்துக்கொள்ளும் உரிமத்தை நாராயணன் என்பவர் 18 ஆயிரத்து நூறுக்கும், கட்டண கழிப்பிடத்தை ஜோதி என்பவர் 12 லட்சத்து ஆறாயிரத்துக்கும், மற்றொரு கட்டண கழிப்பிடத்தை முருகன் என்பவர் 16 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் எடுத்தனர். தவிர இடும்பன் இட்டேரி சாலையில் உள்ள வளாக கடையை திருச்செல்வம் என்பவர் இரண்டு லட்சத்து 31 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு நுழைவுச்சீட்டு கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கு யாரும் ஏலம் கோராததால் மறு ஏலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.